×

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ரோஜா தலைமையில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரயில்வே கோடூர் ஜனசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ஆரவ ஸ்ரீதர் திருமணமான பெண்னை மிரட்டி பாலியியல் பலாத்காரம் செய்து ஐந்து முறை கருக்கலைப்பு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டார். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா, ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பாலியியல் குற்றச்சாட்டிற்கு ஆளான எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அனிதா ராஜினா செய்ய வேண்டும், தொடர்ந்து நியாயம் பேசும் நடிகர் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அவரது கட்சியில் தொடர்ந்து பாலியியல் குற்றச்சாட்டு கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக ரோஜா குற்றசாட்டி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டார். இதனையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுப்பட்ட அனைவரையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Tags : YSR Congress Party ,minister ,Roja ,MLA ,Tirumala ,Andhra Pradesh, Kadapa district ,Railway Kotur ,Jana Sena Party ,Arava Sridhar ,
× RELATED போயிங் நிறுவனத்தின் புத்தம் புதிய 787-9...