×

கர்நாடக மாநில மது கடத்திய பொள்ளாச்சி வாலிபர் கைது

ஈரோடு, ஜன.24: ஈரோடு மாவட்டம், கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று முன் தினம், ஆசனூர் சோதனைச் சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனையிட்டனர். அதில், அவர் கர்நாடக மாநில மதுபாட்டிலை கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர் பொள்ளாச்சி, ராஜா மில் ரோடு பகுதியை சேர்ந்த மகேஷ் பாபு (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், அவர் கடத்தி வந்த கர்நாடக மாநில மதுபாட்டிலையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags : Pollachi ,Karnataka ,Erode ,Gopi Prohibition Enforcement Unit ,Asanur ,Karnataka… ,
× RELATED சத்தியமங்கலத்தில் வாகன ஓட்டிகளை மிரட்டிய கழுதைப்புலி