×

உயர்பொறுப்புகளில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்தாலும் பெண்களுக்கு அதிகம் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் இன்னும் அதிகமாக வெளியே வர வேண்டும். உயர்பொறுப்புகளில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் இருக்க வேண்டும்; பெண்கள் இந்த சமூகத்தின் முதுகெலும்பு; பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது. பெண்களின் முன்னேற்றத்துக்காக கலைஞர் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார் என்று கூறினார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,India ,
× RELATED திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலம்