×

பெரம்பலூரில் குடியரசு தின விழா கோலாகலம் 113 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி நல உதவி

*வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டது

*மூவர்ணத்தில் பறந்த பலூன்கள்

பெரம்பலூர் : பெரம்பலூரில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, 113 பயனாளிகளுக்கு ரூ1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

522 மாணவ, மாணவியரின் கண்கவர் கலை, நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்திய திருநாட்டின் குடியரசு தினவிழா, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று (26ம் தேதி) காலை 8.05 மணிக்கு நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 3 பட்டாலியன் படைப்பிரிவு போலீசார், ஊர்க்காவல் படையினர் இணைந்து நடத்திய காவல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பிறகு 113 பயனாளிகளுக்கு ரூ.1,87,00,704 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட எஸ்பி ஜி.எஸ்.அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர், எஸ்பி ஆகியோர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசியக் கொடி நிறத்திலான வண்ண பலுன்களையும் பறக்க விட்டனர்.

பிறகு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவிரவித்த மாவட்டக் கலெக்டர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 21 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், 53 காவலர்களுக்கும், 362 அரசு அலுவலர்களுக்கும் நற் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பின்னர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை, குரும்பலூர், வேப்பூர் (மகளிர்) அரசு கலை மற்றும் அறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 522 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமைத் திட்ட இயக்குநர் தேவநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சொர்ணராஜ், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட வழங்கல்அலுவலர் சக்திவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரமேஷ், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து, பெரம்பலூர் ஏ.டி.எஸ்.பி (மதுவிலக்கு) பாலமுருகன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய், ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள் விவரம்

வருவாய்த் துறையின் சார்பில் 37 பயனாளிகளுக்கு ரூ23.59 லட்சம், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ75ஆயிரம், ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ33,450, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.27 லட்சம், வேளாண் பொறியியல் துறை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ3.17 லட்சம், தோட்டக் கலைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.3.76 லட்சம், தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.30.15 லட்சம், மாவட்ட தொழில் மையம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம், கூட்டுறவுத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.58.34 லட்சம் என பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 113 பயனிகளுக்கு ரூ.1,87,00,704 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மாவட்ட மிருணாளினி வழங்கினார்.

Tags : Republic Day ,Perambalur ,District Collector ,Mrinalini ,
× RELATED திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலம்