- குடியரசு தினம்
- உ.பி.
- பரேலி
- ஆர்டிஓ
- யோகி ஊராட்சி
- அலங்கார் அக்னிஹோத்ரி
- வருவாய் ஆணையர்
- உத்திரப்பிரதேசம்
- கவர்னர்
- ஆனந்திபென்…
பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வருவாய் கோட்டாட்சியராக இருந்தவர் அலங்கார் அக்னிஹோத்ரி. 2019ம் ஆண்டு சிவில் சர்வீஸ் அதிகாரியான இவர் நேற்று குடியரசு தின விழாவில் பங்கேற்றார். அதன் பின் தனது பதவியை ராஜினாமா செய்வதாக உபி ஆளுநர் ஆனந்தி பென் படேல் மற்றும் பரேலி கலெக்டர் அவினாஷ் சிங்கிற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் சமூகத்தையும் நாட்டையும் பிளவுபடுத்தும் கொள்கைகளை மாநில அரசு பின்பற்றும் போது அவர்களை விழித்தெழ செய்வது அவசியமாகிறது என அக்னிஹோத்ரி கூறி உள்ளார்.
மேலும், கடந்த 13ம் தேதி பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள் 2026ஐயும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடுப்பதற்காக இந்த புதிய விதிமுறைகள் பிராமணர்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு வழிவகுக்கும் என குற்றம்சாட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
