×

வீட்டில் பதுக்கிய மது பாட்டில்கள் பறிமுதல்

பாலக்காடு, ஜன. 23: கேரள-தமிழக எல்லை எருத்தேம்பதி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (48). இவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வருவதாக சித்தூர் டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொழிஞ்சாம்பாறை போலீசார் அவரது வீ்ட்டை சோதனை செய்தனர்.

அப்போது வீட்டில் 661 மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குணசேகரனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று குணசேகரன் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Palakkad ,Gunasekaran ,Eruthempathi ,Kerala-Tamil Nadu border ,Chittoor ,DSP ,Kolinjhamparai ,
× RELATED அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து புதருக்குள் கவிழ்ந்து விபத்து