×

கவுகாத்தியில் இன்று 3வது டி.20 போட்டி; ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்ல சரவெடி இந்தியா ஆயத்தம்!

கவுகாத்தி: இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 3வது போட்டி கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. முதல் போட்டியில் அபிஷேக் சர்மா, 2வது போட்டியில் இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினர். கேப்டன் சூர்யகுமார் ராய்ப்பூரில் அரைசதம் விளாசி பார்முக்கு திரும்பினார்.

ரிங்குசிங், ஹர்திக்பாண்டியா, சிவம் துபே என சரவெடி பேட்டிங் வரிசை உள்ளது. சஞ்சு சாம்சன் மட்டுமே தடுமாறி வருகிறார். பவுலிங்கில் இன்று அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்சித் ரானாவுக்கு பதில் பும்ரா இன்று களம் இறங்குவார். அக்சர் பட்டேலுக்கு இந்த போட்டியிலும் ஓய்வு அளிக்கப்படலாம்.மறுபுறம் நியூசிலாந்து அணியிலும் கான்வே, டிம் சீஃபர்ட், ரச்சின் ரவீந்திரா, பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், என சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும் பவுலிங் தான் பெரும் பிரச்னையாக உள்ளது.

கேப்டன் சான்ட்னர் பந்தை கூட இந்திய வீரர்கள் அடித்து நொறுக்கி விடுகின்றனர். இன்று ஜாக் ஃபௌல்க்சுக்கு பதில் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் களம் இறங்குவார் என தெரிகிறது. இன்று வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்வதற்கு தடைபோட வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது.இரு அணிகளும் இன்று 28வது முறையாக டி.20 போட்டியில் மோத உள்ளன. இதற்கு முன் ஆடிய 27 போட்டியில் இந்தியா 16, நியூசிலாந்து 10ல் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

கவுகாத்தியில் இதுவரை……
கவுகாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இதற்கு முன் இந்தியா 4 டி.20 போட்டிகளில் ஆடி 2022ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இலங்கைக்கு எதிராக போட்டி கைவிடப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா 237/3 ரன் எடுத்ததே அதிகபட்சமாகும். நியூசிலாந்து இங்கு முதன் முறையாக டி.20 போட்டியில் ஆட உள்ளது.

Tags : 3rd T20 ,Gawathi ,Saravedi ,India ,Gawati ,T20 ,New Zealand ,
× RELATED இந்தோனேஷியா பேட்மின்டன்: சென் யுபெய் சாம்பியன்