மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர். பள்ளப்பட்டி சாலையோரம் நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துகுள்ளானதில் ரஞ்சிதம் (65), சுதர்சன் (23) உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 15 பேரும் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
