- இலங்கை ராமேஸ்வரம்
- மூங்காய்
- இலங்கை
- ராமநாதபுரம்
- மாவட்டம்
- பம்பன் தென்வாடி மீன்பிடி துறைமுக
- டோபியாஸ்
- குருசாமி
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருக்கும் 10 மீனவர்களை விடுவிக்கக் கோரி, பாம்பனில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஆக. 6ம் தேதி கடலுக்கு சென்ற தோபியாஸ் (37), குருசாமி (39), பரத் (31), ரவி (47), ஜோஸ் பாரதி (22), மரிய பிரவீன் (31), மனோ சந்தியா (32), பிலிப்பியர் (43), மேத்யூ கினலடன் (24), டேனியல் ராஜ் (33) ஆகிய 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வெளிச்சாரா சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 10 மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் ரூ.14 கோடியே 61 லட்சம் அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால், 18 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனால் இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிக்கு ஆளாகியுள்ளதாக தொலைபேசியில் தெரிவித்தனர். அவர்களை ஒன்றிய அரசு மீட்க கோரி, நேற்று மாலை பாம்பன் பேருந்து நிறுத்தம் முன்பு திடீரென மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் டிஎஸ்பி முத்துராஜ் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
