×

மலைக்கோயில் 1300 படிக்கட்டில் யோகாசனம் செய்து ஏறிய இஸ்லாமிய சிறுமி

திருச்செங்கோடு: சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் ஜூபேர் அகமது (36), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அதியா பானு (30). இவர்களது மகள் ஹனா (7), 3ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமி, நேற்று காலை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவர் மலைக்கோயிலில் உள்ள 1300 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தவாறு ஏறி சாதனை படைத்தாள்.

ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் வெவ்வேறு வகையான ஆசனங்களை செய்தபடி, சிறுமி மலையேறியது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது. சிறுமி ஹனா நிருபர்களிடம் கூறுகையில்,‘ கடந்த சில வருடங்களாக யோகாசனம் பயின்று வருகிறேன். ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என நினைத்து அர்த்தநாரீசுவரர் மலைக்கோயில் 1300 படிக்கட்டுகளிலும் யோகாசனம் செய்தபடி மலை ஏறி இருக்கிறேன்’ என்றாள்.

Tags : Malaikoi ,Zubar Ahmed ,Salem ,Athia Banu ,Hana ,Namakkal district ,Trichenkot ,
× RELATED சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய...