×

மேட்டூர் அணை நீர்மட்டம் 94.6 அடியானது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 116 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 35 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 7,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 95.17 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ேநற்று காலை 94.66 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 58.14 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur Dam ,Mettur ,
× RELATED சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய...