- என்டிஏ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செல்வப்பெருந்தகை சாடல்
- சென்னை
- காங்கிரஸ்
- செல்வப்பெருந்தகை
- அஇஅதிமுக
- பாஜக
- சாமா, பேத்தா
- தனதம்ஸ்
- Maduranthakam
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சாம, பேத, தான தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.வை காலூன்ற வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி அமைக்கப்பட்ட கூட்டணி கட்சியினரின் முதல் அரங்கேற்றம் மதுராந்தகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு பெயர் அ.தி.மு.க. கூட்டணியா? தேசிய ஜனநாயக கூட்டணியா? என்கிற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.
முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாக இது அமைந்திருக்கிறது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதில் தமது உரையின் பெரும் பங்கை செலவழித்திருக்கிறார். இந்தியாவிலேயே பா.ஜ.வை கடுமையாக எதிர்க்கிற ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டில் பா.ஜ.வை எதிர்ப்பதற்கு காரணம் ஒன்றிய அரசின் பாரபட்ச போக்கு தான். எனவே தமிழ் நாட்டில் மோடியும் அமித்ஷாவும் எத்தனைமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தேர்தலில் உரிய பாடத்தை தமிழக மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
