- சென்னை
- தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு
- கமலாலயா, சென்னை
- அதனால்தான் துணை குடியரசுத் தலைவரின்
- வி.பி.துரைசாமி
- கே. பி. ராமலிங்கம்
- கனகசபதி
- மாநில நிர்வாகக் குழு
- கே. எஸ். ராடகிருஷ்ணன்
சென்னை: சென்னை கமலாலயத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் நடந்தது. தமிழிசை தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் வி.பி. துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கனகசபாபதி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:
எங்களது தேர்தல் அறிக்கை எல்லாப் பிரிவினரும் வளர்ச்சி அடையக்கூடிய தேர்தல் அறிக்கையாக இருக்கும். இதுவரை எந்த அரசியல் கட்சியும் கொடுக்காத தேர்தல் அறிக்கையாக இருக்கும். மிக நம்பிக்கையோடு 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டுச் சென்று இருக்கிறார். அதனால், வெற்றி பெறும் கூட்டணிக்கு சிபாரிசு செய்யக்கூடிய தேர்தல் அறிக்கையாக இது இருக்கும்.
சிபிஐ விசாரணைக்கு விஜய்யை அழைப்பது சட்டரீதியான நடவடிக்கை. அவரை அங்க வர வைப்பது, இங்க வர வைப்பதற்காக அல்ல. அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விசில் எங்களுக்கு இப்போது உடனே தேவையில்லை. எங்களிடமே விசில் இருக்கிறது, குக்கர் விசில் எங்களிடம் இருக்கிறது. இதற்கு மேலும் கட்சிகள் தேஜ கூட்டணிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
