- முதல் அமைச்சர்
- மணிமா செயற்குழு
- சென்னை
- மக்கல் நீதி மயம் கட்சி
- Manima
- கமல்ஹாசன்
- பொதுச்செயலர்
- அருணாசலம்
- துணை ஜனாதிபதிகள்
- தஞ்சவேலு
- மௌரியா
- பொருளாளர்
- சந்திரசேகர்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம், நேற்று மநீம தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்தது. மநீம தேர்தல் பணிக்குழுவில் பொதுச்செயலாளர் அருணாசலம், துணை தலைவர்கள் தங்கவேலு, மவுரியா, பொருளாளர் சந்திரசேகர், மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், இன்று (நேற்று) முதல் விருப்ப மனு செய்யலாம். விருப்ப மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மநீம கட்சி தொடங்கப்பட்ட தினம், உலக தாய்மொழிகள் தினம் ஆகியவற்றை கொண்ட பிப்ரவரி 21ம் தேதியை, மதுரை நகரில் Remembering Babuji என்ற பெயரில் கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அறிஞர்கள், அரசியல் தலைவர்களுடனான கலந்துரையாடலில் கமல்ஹாசன் பங்கேற்கிறார் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலனை வழங்கக்கூடிய, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்களும் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
