×

2026 தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ய 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து மநீம தீர்மானம்!!

சென்னை: சென்னையில் மநீம அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மதம் மற்றும் ஜாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி நடக்கிறது. மேடையில் தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார்களே தவிர தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவதில்லை. தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டும் தமிழை நேசிப்பதாக சொல்லி கொள்கிறார்கள். பிற மாநில பரப்புரைகளில் தமிழர்களை திருடர்கள், பிரிவினைவாதிகள், கொடுங்கோலர்கள் என பேசுகின்றனர்.

இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றம்:

*2026 தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ய 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து மநீம தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்க காரணமாக இருந்த கமல், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*விருப்ப மனு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயம் செய்யப்படுகிறது.
*தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*தமிழ்நாடு மக்கள், நலன்களை முன்னிறுத்தி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று மநீம தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
*சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொள்வது சிறிதும் ஏற்கத்தக்கது அல்ல.
*மாநில சுயாட்சியில் ஆளுநர் தலையிடுவது, இடையூறு செய்வது கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது.
*ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஜி ராம் ஜி திட்டத்தை கண்டித்து மநீம செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழாய்வு அறிக்கைகளை முடக்குவதை மநீம கண்டிக்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Maneema ,2026 elections ,Chennai ,Kamal Haasan ,Makkal Needhi Maiam party ,
× RELATED ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.1,040...