- பூவ்ரிந்தவல்லி –
- வடபழனி
- சென்னை
- ரயில்வே பாதுகாப்பு ஆணையம்
- சென்னை மெட்ரோ ரெயில்
- மாதவரம்
- சிறுசேரி சிப்காட்
- பூவிருந்தவல்லி
சென்னை: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு அடுத்த மாதம் நடக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில் மாதவரம் – சிறுசேரி சிப்காட், பூவிருந்தவல்லி – கலங்கரை விளக்கம், மாதவரம் – சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரையிலான ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் சேவையை விரைவாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பாதுகாப்பு சான்றிதழ் பெறப்பட்டது. இந்த நிலையில், பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் இறுதிக்கட்ட ஆய்வினை ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அடுத்த மாதம் மேற்கொள்கிறது. பிப்பவரி 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். மெட்ரோ ரயிலின் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி பயணிகளின் பாதுகாப்பு கட்டுமானம் குறித்து முதல் 2 நாட்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதில் 3வது நாளில் மெட்ரோ ரயிலை 80 – 90 கி.மீ. வேகத்தில் இயக்கி ஆய்வு செய்யப்படுகிறது. ரயிலில் உள்ள பயணிகள் அவசர காலங்களில் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ளும் வசதி, தீ விபத்து ஏற்பட்டால் செயல்படும் புகை கண்டறியும் கருவிகள், ரயில் இழுவை அமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் சரியாக இயங்குகிறதா? உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. இறுதிக்கட்ட ஆய்வுக்கு பிறகு ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.
