×

முதியவர் சடலம் மீட்பு

கோவை, ஜன. 24: கோவை உக்கடம் நாஸ் தியேட்டர் அருகே நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதனை பார்த்தவர்கள் உக்கடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுமார் 70 வயது மதிக்கத்தக்க அவர் யார்? என்பன போன்ற விவரம் கிடைக்கவில்லை. வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Coimbatore ,Ukkadam Nas Theater ,Ukkadam ,Coimbatore Government Hospital… ,
× RELATED மாநகராட்சியில் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.150 கோடி நிதி