×

ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் மக்காச்சோள ஏலத்தில் கலந்து கொள்ள அழைப்பு

ஒட்டன்சத்திரம், ஜன. 24: ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் மக்காச்சோள ஏலத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வி.பி.சிவராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஒட்டன்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் மக்காச்சோளம் ஏலம் நடத்தப்படுகிறது.

இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதால் விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. எனவே ஒட்டன்சத்திரம் வட்டார விவசாயிகள் தங்களின் விளை பொருளான மக்காச்சோளத்தை விற்க மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : Ottanchathiram ,Ottanchathiram Regulated Sales Hall ,Superintendent ,V.P. Sivaramakrishnan ,
× RELATED வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி