×

என்டிஏ கூட்டணினு சொல்றாங்க… அதிமுக பலவீனமாகிவிட்டது: திருமாவளவன் பேட்டி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று மாலை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 2021 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்த கூட்டணி தான் இப்போது அமைந்திருக்கிறது. அதிலும் அப்போது அதிமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள், தேமுதிக இன்னும் கூட்டணியில் சேரவில்லை. எனவே இது பலவீனமான ஒரு கூட்டணி தான். 2021ல் அவர்கள் கூட்டணி எவ்வாறு தோல்வியை தழுவினார்களோ, அதைப்போல் 2026 தேர்தலிலும் அந்த கூட்டணி தோல்வியை சந்திக்கும். 2021ல் அதிமுக தலைமையிலான கூட்டணி என்ற பெயரோடு தேர்தலை சந்தித்தனர்.

ஆனால் இப்போது என்டிஏ தலைமையிலான கூட்டணி என்று தேர்தலை சந்திக்கின்றனர். அந்த அளவு அதிமுக பலவீனம் ஆகிவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணியாக தான் இருக்கிறோம். தமிழக மக்களின் முழு ஆதரவு, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது என்பது பாஜவுக்கு நன்றாக தெரியும். எங்களுடைய அரசியல் நிலைப்பாடு, கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதி. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. திமுக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. ஒன்றோடு ஒன்று வலுவான இணைப்பு பிணைப்பு உள்ளது.

Tags : NDA ,AIADMK ,Thirumavalavan ,Chennai ,Tigers ,Tamil Nadu ,Bengaluru ,2021 assembly elections ,
× RELATED ஓபிஎஸ் எங்களுடன் வருவார்: டிடிவி தினகரன்