×

சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீர பூமி தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சென்னை: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் உயிர் தியாகம் செய்துள்ள வீர பூமி தமிழ்நாடு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், மொண்டியம்மன் நகரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர், அவர் பேசுகையில்,‘ நாட்டின் தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி. நாட்டின் சுதந்திரத்தில் மிக பெரிய பங்கு வகித்தவர் நேதாஜி. எண்ணிலடங்கா சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்பு காரணமாக நாடு சுதந்திரம் பெற்றது. தமிழ்நாட்டில் இருந்து 5000 பேர் நேதாஜியின் படையில் இணைந்து பணியாற்றி உயிர் தியாகம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர், இந்திய தேசிய படையில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர். தமிழ்நாடு ஒரு வீர பூமி,’என்றார்.

Tags : Tamil Nadu ,Governor R.N. Ravi ,Chennai ,India ,Netaji Subhas Chandra Bose ,
× RELATED சென்னை ராயபுரம் பகுதியில் “நலம்...