×

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ.5.34 லட்சம் அபராதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த டிச.23ம் தேதி சந்தியா நிவாஸ்டன், கயூஸ் ராஜ், ஜேம்ஸ் கேயிடண், பிரபாத், டோஜா, அந்தோணி டில்மன், ஆக்போ நிஜோ, மரிய ஆண்டோ பெஸ்டன், கோர்பசேவ், மதன்சன், நிமல் சகாயம், ஆனந்த் ஆகிய 12 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களை எல்லை மீறியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் காவல் நேற்று முடிந்ததால், 12 மீனவர்களும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு இந்திய மதிப்பில் தலா ரூ.44,500 வீதம் மொத்தம் ரூ.5.34 லட்சம் அபராதம் விதித்தார்.

Tags : Rameswaram ,Sandhya Nivastan ,Caius Raj ,James Gaydon ,Prabhat ,Doja ,Anthony Tillman ,Agbo Nijo ,Maria Ando Bestan ,Gorbachev ,Madanson ,Nimal Sakhayam ,Anand ,
× RELATED சென்னை ராயபுரம் பகுதியில் “நலம்...