டெல்லி : ரூ.1.5 லட்சம் கோடி வங்கி முறைகேடு வழக்கில் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மீதான வங்கி முறைகேடு விசாரணையை நீதிமன்ற மேற்பார்வையில் நடத்தக் கோரிய வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.1.5 லட்சம் கோடிக்கு பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று மோசடி என ரிலையன்ஸ் நிறுவனம், அனில் அம்பானி மீது புகார் கூறப்பட்டுள்ளது.
