சென்னை: மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழி பத்திரம் ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் உள்ள விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் காளைகளும், வீரர்களும் பங்குபெறுவதை உறுதி செய்ய, ஆன்லைன் பதிவை மாற்றி மாவட்ட அளவில் முடிவுசெய்து கொள்ள வழிவகை செய்யப்படும்.
