×

திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

 

சென்னை: புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு இந்தியில் கர்தவ்ய த்வார் என பெயர் வைத்ததற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “ கர்தவ்ய த்வார்” என தெற்கு ரயில்வேஇந்தியில் பெயர் வைத்துள்ளது

“ கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “ கடமையின் நுழைவுவாயில்” என்று பெயர். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை “ இந்தித் திணிப்பு” மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Trichy Railway ,Shu. Venkatesan M. B. ,Chennai ,Trichy Mandala Railway ,Kardavya Dwar ,Venkatesan M. B. ,
× RELATED திருவொற்றியூரில் ரூ.9.8 கோடியில் நவீன மார்க்கெட்: விரைவில் திறக்க ஏற்பாடு