×

கவுண்டம்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

கோவை, ஜன. 22: கோவை கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயிஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெற்று கொள்ளலாம்.

சிறப்பு மருத்துவ நிபுணர்களால் பரிசோதனைகள் செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொது மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கேட்டு கொண்டுள்ளார்.

 

Tags : Nalam Kaakum Stalin ,Kaundampalayam ,Coimbatore ,Nalam ,Kaakum Stalin ,Government Higher Secondary School ,Kaundampalayam, Coimbatore ,
× RELATED மலைப்பாதையில் பயணிக்கும் அரசு பஸ்...