×

‘நீட்’ மாணவி மர்ம மரணம் எதிரொலி; பலாத்கார சந்தேகத்தால் : பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

 

பாட்னா: பாட்னாவில் மர்மமான முறையில் உயிரிழந்த நீட் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்கள் விடுதிக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். பீகார் மாநிலம் ஜஹாலாபாத் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர், பாட்னாவில் உள்ள சித்ரகுப்தா நகரில் ஷம்பு பெண்கள் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த 5ம் தேதி ஊரிலிருந்து விடுதிக்கு திரும்பிய அவர், மறுநாளான 6ம் தேதி தனது அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்பத்தில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் மற்றும் கீறல்கள் இருந்ததால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் ேநற்கு அந்த விடுதிக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

விடுதி உரிமையாளர் மனிஷ் குமார் ரஞ்சன் அலட்சியமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் குடும்பத்தினர், ‘எங்கள் மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். விடுதி நிர்வாகம் இதை மறைக்க முயற்சிக்கிறது’ என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவியின் டைரி கைப்பற்றப்பட்டுள்ளது, அதில் அவர் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே கார்கில் சவுக் பகுதியில் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் அவுரங்காபாத்தை சேர்ந்த மற்றொரு 15 வயது நீட் மாணவியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Patna ,Jahalabad ,Bihar ,
× RELATED பாஜக புதிய தலைவராக நிதின் நபின்...