×

முன்னாள் படை வீரா், அவர்களை சார்ந்தோர்களின் சட்ட ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை

திருச்சி, ஜன.21: திருச்சி மாவ ட்ட முன்னாள் படை வீரர்நல துணை இயக்குநர் அலுவலகத்தில், வாரந்தோறும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் சட்ட ரீதியான பிரச்னைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் சர வணன் தெரிவித்துள்ளார். முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு சட்ட ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை பெறும் வகையில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் மையம் திருச்சி மாவட்ட முன்னாள் படை வீரர்நல துணை இயக்குநர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்கள் சார்ந்தோர்கள் தங்களுக்கு ஏற்படும் சட்ட ரீதியான பிரச்னைகளுக்கு சட்ட ஆலோசனை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் சரவணன் தொிவித்துள்ளார்.

Tags : Trichy ,Deputy Director ,Welfare ,Trichy District ,Saravanan ,
× RELATED மாவட்ட கலெக்டர் அழைப்பு தொட்டியம்...