மதுரை: மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கல்யாணியுடன் பணியாற்றிய உதவி மேலாளரே பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. முதுநிலை மேலாளர் கல்யாணியை எரித்துக் கொன்ற உதவி மேலாளர் ராம் கைது செய்யப்பட்டார். முதுநிலை மேலாளர் கல்யாணி தீயில் கருகி உயிரிழந்த நிலையில், உதவி மேலாளர் ராம் சிறிய தீக்காயத்துடன் தப்பினார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் உதவி மேலாளர் ராம் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. டெத் கிளைம் பாலிசி கொடுக்காமல் கால தாமதப்படுத்தியதாக முகவர்கள் கல்யாணிடம் புகார் அளித்து உள்ளனர். உயரதிகாரிகளுக்கு புகாரளிப்பேன் என கல்யாணி தெரிவித்ததால் ஆத்திரமடைந்த உதவி மேலாளர் ராம், கல்யாணியைகொலை செய்துள்ளார்.
