×

சேலம் மெயின்ரோட்டில் சாலை விரிவாக்க பணி தீவிரம்

தர்மபுரி, ஜன.28: தர்மபுரி -சேலம் மெயின்ரோடு கலெக்டர் அலுவலகம் அருகே, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து அரசு கலைக்கல்லூரி பஸ் ஸ்டாப் வரை, சுமார் அரை கி.மீ., தொலைவிற்கு சாலை விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தொழிலாளர்கள் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரிவாக்க பணியின்போது, சேலம் மெயின்ரோட்டில் இருந்து ஏமகுட்டியூர் பிரிவு சாலை வளைவில், மழைநீர் செல்வதற்கு தரைபாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் அமைப்பதற்கான பணிகள் நேற்று துவங்கியது. இந்த சாலை விரிவாக்க பணியால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலகம் முதல் ஏமகுட்டியூர் பிரிவு சாலை வரை, போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இந்த சாலை விரிவாக்கத்தை அப்படியே ஏமகுட்டியூர் ராமன்நகர் வரை நீடித்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். மேலும், தரைப்பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகே, தெருவிளக்கு வசதியுடன் பஸ் ஸ்டாப் அமைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’
என்றனர்.

Tags : road ,Salem Main Road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி