×

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை: சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து குறித்த காலத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 37.99 ஏக்கர் பரப்பில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. பொருட்காட்சி அரங்கம், மாநாட்டு மண்டபம், கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பன்னாட்டு மையம் அமைகிறது.

Tags : Chief Minister ,MK Stalin ,Kalaignar International Centre ,Muttukadu ,Chennai ,Kalaignar ,
× RELATED பாமகவுக்கு உரிமை கோரி அக்கட்சி...