×

சென்னையில் இன்று தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம்

சென்னை: தவெக சார்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில், சென்னை பனையூரில் இருக்கும் தவெக தலைமை நிலைய செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழக மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு இந்த தேர்தல் அறிக்கை உருவாகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும், தேவைகளையும் அறிந்து தரவுகளை பெறுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்’ என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.

Tags : Tevag Election Manifesto Committee ,Chennai ,Tevag ,Vijay ,Panayur, Chennai ,
× RELATED தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம்...