சென்னை: பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர்வதற்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2026-27ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் மார்ச் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதை தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பின்னர் கால அவகாசம் வழங்கப்படும். இதுசார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
