×

பருப்பு வகைகள் மீதான வரியை குறைக்க இந்தியாவுக்கு அழுத்தம் தர வேண்டும்: அமெரிக்க எம்பிக்கள் அதிபர் டிரம்புக்கு கடிதம்

வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஏற்கனவே இருநாடுகளும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே, இந்தியாவின் இறக்குமதி பொருள்களுக்கு 25% பரஸ்பர வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25% வரி என மொத்தம் 50% வரியை விதித்துள்ளார். இந்நிலையில் பருப்பு வகைகள் மீதான வரியை குறைக்க இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் தர வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தை சேர்ந்த குடியரசு கட்சி செனட்டர் ஸ்டீவ் டெய்ன்ஸ் மற்றும் விக்கு டகோட்டாவை சேர்ந்த செனட்டர் கெவின் க்ரேமர் ஆகியோர் அதிபர் டிரம்புக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், “பருப்பு, கொண்டைக்கடலை, உலர்ந்த பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகியவை இந்தியாவில் அதிகம் நுகரப்படும் பருப்பு பயிர்களில் முக்கியமானவை. ஆனால், இந்த பருப்பு வகைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய கணிசமான அதிக வரிகளை இந்தியா விதித்துள்ளது.

குறிப்பாக மஞ்சள் பட்டாாணி மீது இந்தியா விதித்துள்ள 30 சதவீத வரி கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவின் இத்தகைய நியாயமற்ற வரிகளின் விளைவாக அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது, இருநாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த பருப்பு வகைகள் மீது இந்தியா விதித்துள்ள வரியை குறைக்க இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் தர வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.

Tags : India ,President Trump ,Washington ,US ,
× RELATED இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் திடீர் மாயம்