×

மதுபான விடுதி அருகே துப்பாக்கிச்சூடு இந்திய வம்சாவளி மாணவி உட்பட 4 பேர் பலி

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸில் ஆஸ்டினில் உள்ள ஒரு மதுபானக் கடைக்கு வெளியே கடந்த ஞாயிறன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் காரில் வந்து இறங்கினார். முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய அவர் பின்னர் அங்கு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். போலீசார் இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை சுட்டுக்கொன்றனர். மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி சவிதா ஷான் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். சம்பவ இடம் மற்றும் சந்தேக நபரின் வீட்டில் இருந்தும் மீட்கப்பட்ட பொருட்களில் ஈரானிய கொடி இருந்ததாக தெரிகின்றது.

Tags : Houston ,Austin, Texas ,
× RELATED அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...