×

சிரியாவில் அலெப்போவை தொடர்ந்து டெய்ர் ஹபர் நகரையும் ராணுவம் கைப்பற்றியது: குர்திஷ் படைகள் பின்வாங்கின

ஹமிமா: கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் ஆட்சி கவிழ்ந்த பின், 2024ல் அகமது அல் ஷாரா தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து அரசு படைகளுடன், அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் போராளிகள் குழுவான சிரிய ஜனநாயக படையை இணைக்க பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த 15 ஆண்டுகளாக, நாட்டின் எண்ணெய் வளம் மிக்க வடக்கு பகுதியை குர்திஷ் படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

இதற்கிடையே, பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து சிரிய ராணுவத்திற்கும், குர்திஷ் படைகளுக்கும் இடையே கடந்த வாரம் அலெப்போவில் மோதல் தொடங்கியது. இதில் நாட்டின் மிகப்பெரிய அலெப்போ நகரை சிரிய ராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக டெயர் ஹபர் மற்றும் மஸ்கானா நோக்கி முன்னேறின. இரு நகரங்களிலும் தாக்குதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களில் 11,000 பேர் இரு நகரங்களை விட்டு வெளியேறினர். இந்நிலையில் சிரிய ராணுவத்தினர் நேற்று டெய்ர் ஹபர் நகருக்குள் நுழைந்தனர். அரசின் கட்டுப்பாட்டில் டெய்ர் ஹபர் வந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து புலம்பெயர்ந்த பல்வேறு மக்களும் மீண்டும் டெய்ர் ஹபர் வரத் தொடங்கி உள்ளனர்.

Tags : Aleppo ,Syria ,Deir Habar ,Hamima ,President Bashar al-Assad ,Ahmed al-Sharaa ,US ,
× RELATED பருப்பு வகைகள் மீதான வரியை குறைக்க...