சென்னை: சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் சில நாட்களில் அறிவிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஒ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. தான் புதிய கட்சி எதையும் தொடங்கப்போவது இல்லை என்றும் அறிவித்தார்.
