×

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்: எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். குல விளக்குத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மாதம் ரூ.2,000. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும். 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Tags : Adimuka ,Edappadi Palanisami ,Chennai ,Archbishop ,
× RELATED எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அவரது...