×

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 வாக்குறுதி

 

சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: வான்புகழ் வள்ளுவரை போற்றும் திருவள்ளுவர் தினத்தில் தமிழக மக்களுக்கு நான் நான்கு வாக்குறுதிகளை அளிக்கிறேன். அஞ்சாமை – மனித நேயம் – அறிவாற்றல் – ஊக்கமளித்தல் வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம் ‘‘அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர் கியல்பு’’ அஞ்சாமை – சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக போராடும் துணிச்சல்.

மனித நேயம் – வறியோர் எளியோர் வாழ்வுயர மனித நேய திட்டங்கள். அறிவாற்றல் – இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். ஊக்கமளித்தல் – தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்க பணிகள். இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

Tags : Chief Minister ,MK Stalin ,Tamil Nadu ,Thiruvalluvar Day ,Chennai ,
× RELATED பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை...