×

கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

மதுரை, ஜன. 10: மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், வைகை ஆற்றுக்குள் கட்டப்படும் ஒரு வழிப்பாதையான மேம்பாலம் பிப்ரவரி இறுதியில் திறக்கப்பட உள்ளது. இதற்காக இன்று (ஜன.10) அல்லது நாளை (ஜன.11) முதல் கோரிப்பாளையம் சாலையை, மீனாட்சி கல்லூரி சந்திப்பில் உள்ள பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

இதற்காக, கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து மீனாட்சி கல்லூரி நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் இடதுபுறம் திரும்பி, பின்னர் சற்று வலதுபுறம் திரும்பி அங்குள்ள சர்வீஸ் சாலை பாலம் வழியாக ஏவி மேம்பாலம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Tags : Koripalayam ,Madurai ,Vaigai river ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி