×

போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம் ஜன.10:போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படியும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர வழிகாட்டுதலின் படி ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் 2026 ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது‌.

சுமார் 550-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்குபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மதிவாணன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் , உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கியநாதன் ஆசிரியர் இளஞ்செழியன் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரஜினி, காவல் ஆளினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Tags : Traffic Police ,Jayankondam ,Ariyalur District Police District ,Superintendent of ,Sub ,Superintendent of Police ,Jayankondam Traffic Police Station… ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி