×

கல்வி உதவித்தொகை தேர்வு 8,529 மாணவர்கள் நாளை பங்கேற்பு: 42 மையங்களில் நடக்கிறது

மதுரை, ஜன.9: ஒன்றிய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்எம்எம்எஸ்) திட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் வழங்கப்படும். இதன்படி உதவித்தொகை பெறும் மாணவர்களை தேர்வு செய்வதற்கு, நடப்பு கல்வியாண்டிற்கான என்எம்எம்எஸ் தேர்வு நாளை (ஜன.10) நடைபெறுகிறது. இதன்படி மதுரை மாவட்டத்தில் 42 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இதனை எழுதுவதற்கு 8529 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Madurai ,Union Government ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி