×

தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலம்

தஞ்சாவூர், ஜன.9: தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. மாணவிகள் புடவை அணிந்தும், மாணவர்கள் வேட்டி சட்டை அணிந்தும், பல்கலைகழக டீன் ஜெகன்மோகன் முன்னிலையில் பொங்கல் வைத்து பொங்கலோ, பொங்கல் என மகிழ்ச்சியை பகிர்ந்து உழவர் திருநாளை கொண்டாடினர்.

மேலும் பசு மாடுக்கும், கன்றுக்கும் மாலையிட்டு மரியாதை செய்தும், ஆட்டம், பாட்டத்துடன் பொங்கல் திருநாளை கொண்டாடினர். அப்போது, பேராசிரியர்கள் நடனமாடியதால் மகிழ்ச்சி இரட்டிப்பானது. இது குறித்து டீன் கூறுகையில்: நமது உழவர் திருநாள் கொண்டாட்டத்தை பிற மாநில மாணவர்களுக்கும் கற்றுத்தருவதாக தெரிவித்தார். மேலும், அந்தமான் மாணவி, மேகாலயா மாணவரும் இது போன்ற கொண்டாட்டத்தை முதன்முதலாக பார்ப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

 

Tags : Pongal ,Thanjavur Eechangottai ,Agricultural ,College ,Thanjavur ,Dr. ,M.S. Swaminathan Agricultural College ,Dean ,Jaganmohan ,Pongal… ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி