புதுக்கோட்டை, ஜன. 8: இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியை இயக்கம் சார்பில் தொடர்ந்து சென்னையில் 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
