- அங்கன்வாடி
- புதுக்கோட்டை
- அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு
- சத்தான உணவுகள் கூட்டமைப்பு, அங்கன்வாடி சங்கங்கள்
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
புதுக்கோட்டை, ஜன. 8: அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கும் சமையல் மற்றும் உதவியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச சிறப்பு ஓய்வூதியம் ரூபாய் 6750 அகவிலை படியுடன் வழங்கிட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை ஊழியர்களின் பணி சுமையை கருதி உடனடியாக நிரப்பிட வேண்டும்,
சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திரண்ட சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் கோஷங்களை எழுப்பி 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
