×

1980களில் கிரிக்கெட் வீரருடனான உறவின் போது திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றது துணிச்சலான முடிவு அல்ல: இளம்பெண்களுக்கு நடிகை நீனா திடீர் அறிவுரை

மும்பை: திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொண்டது தனது துணிச்சலான முடிவு அல்ல என்றும், சூழ்நிலை காரணமாகவே அவ்வாறு நேரிட்டதாகவும் பிரபல நடிகை நீனா குப்தா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். பிரபல மூத்த பாலிவுட் நடிகை நீனா குப்தா, கடந்த 1980களில் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸுடன் தொடர்பில் இருந்தபோது திருமணம் செய்யாமலே மசாபா குப்தா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்காலத்தில் இது பெரும் புரட்சியாகவும், துணிச்சலான முடிவாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கடந்தகால கசப்பான அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், ‘எனக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து மோதிரம் மாற்றிக் கொண்டோம். டெல்லியில் திருமண ஆடைகள் வாங்கிய நிலையில், கடைசி நேரத்தில் அவர் தனக்கு ‘சைனஸ்’ ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறி திருமணத்தை நிறுத்தினார். பின்னர் 6 மாதம் கழித்து வந்து மீண்டும் திருமணம் செய்யலாம் என அழைத்தபோது, அவரைத் திட்டி அனுப்பிவிட்டேன்’ என்று பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொண்டது குறித்து அவர் பேசுகையில், ‘நான் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிடவில்லை. இக்கட்டான சூழ்நிலையே என்னை அந்த நிலைக்குத் தள்ளியது. இதைத் துணிச்சல் என்று கூறாதீர்கள்.

யாரும் எனக்கு நிதியுதவியோ, ஆறுதலோ கூறப்போவதில்லை என்பதால், மற்றவர்களின் விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை’ என்று தெரிவித்தார். தொடர்ந்து இளம்பெண்ளுக்கு அறிவுரை வழங்கிய அவர், ‘என்னை முன்மாதிரியாகக் கொண்டு இளம்பெண்கள் யாரும் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவை எடுக்காதீர்கள். அது மிகவும் கடினமான வாழ்க்கை. அதேபோல் சினிமாத் துறையில் வெற்றி பெறுவது சாதாரணமானது அல்ல; வேறு வழியே இல்லை என்றால் மட்டும் இந்தத் துறைக்கு வாருங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

Tags : Neena ,Mumbai ,Neena Gupta ,Bollywood ,
× RELATED பில், ஆவணங்கள் இல்லாமல் வீட்டில்...