சென்னை: அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக சார்பில் அன்புமணி கூட்டணி பேசியதாக வெளியான தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். டிசம்பர் 17ம் தேதி செயற்குழு, பொதுக்குழுவால் ராமதாஸ் தலைவராக அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்சி விதிப்படி பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமே கூட்டணி குறித்து பேச உரிமை உள்ளவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 9 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என ராமதாஸ் கூறியுள்ளார். டெல்லி ஐகோர்ட் தீர்ப்புக்குப் பிறகு பாமகவை நிறுவனத் தலைவராக வழிநடத்தி வருகிறேன். 9ம் தேதி காலை 10 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் விருப்ப மனுக்கள் வழங்கலாம் என தெரிவித்துள்ளார். விருப்ப மனுக்களை தைலாபுரம் அலுவலகத்தில் பெற்றதும் உடனே ரசீது வழங்கப்படும். அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி இணைந்த நிலையில் பாமக சார்பில் விருப்ப மனு பெறலாம் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.
