×

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

 

சென்னை: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : RAIN ,TAMIL NADU ,Chennai ,Weather Centre ,South West Bank ,Puduwa ,Karaikal ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...