×

குடியரசு தினவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு

தர்மபுரி, ஜன.26: குடியரசு தினவிழாவையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் 72வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தர்மபுரியில் உள்ள விளையாட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கார்த்திகா தேசிய கொடியேற்றி வைக்கிறார். இதனையொட்டி, மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். தர்மபுரி, மொரப்பூர், பாலக்கோடு மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தர்மபுரி வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Tags : district ,Republic Day ,
× RELATED வீட்டை சுற்றி திடீர் போலீஸ்...