குளச்சல், ஜன.7: வெள்ளிசந்தை அருகே குருந்தன்கோடு காந்திநகரை சேர்ந்தவர் பகவதியப்பன் (64). அவரது மனைவி வெள்ளையம்மாள் (64). இந்த தம்பதியினரை அதே பகுதியை சேர்ந்த சூரியா (26) என்பவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து திட்டுவது வழக்கமாம். இந்தநிலையில் நேற்று முன்தினம் சூரியா, பகவதியப்பன் மற்றும் வெள்ளையம்மாளிடம் தகராறு செய்துள்ளார். சூரியாவிற்கு ஆதரவாக அவரது தந்தை சுயம்புக்குமாரும் வயதான தம்பதியினரை திட்டியதுடன், அதனை தட்டி கேட்ட பகவதியப்பனை மண்வெட்டியினால் தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த வெள்ளையம்மாளையும் கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வெள்ளையம்மாள் அளித்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சூரியா மற்றும் அவரது தந்தை சுயம்புக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
