×

குளச்சலில் திருப்பலி நடத்த விடாமல் தடுத்து தகராறு 13 பேர் மீது வழக்கு

குளச்சல், ஜன.7: திக்குறிச்சி அருகே பாகோடை சேர்ந்தவர் சுனில்(36). குளச்சல் அருகே வடக்கு கல்லுக்கூட்டத்தில் உள்ள ஆலயத்தில் அருட்பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 14ம் தேதி வடக்கு கல்லுக்கூட்டம் ஆலயத்தில் திருப்பலி நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ், அவரது மகள் அபிஷா, ஜெலஸ்டின் வறுவேல் ராஜா, பிரைட் பென்சிகர், பன்னீர் கிங்சிலி மற்றும் 8 பேர் சுனிலை திருப்பலி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சுனில் அளித்த புகாரின் பேரில் அருள்தாஸ் உள்ளிட்ட 13 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kulachal ,Sunil ,Bagoda ,Thikurichi ,North Kallukkoottam ,Aruldas ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை